மணல் எடுத்து வந்த 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

நெல்லிக்குப்பம், ஆக. 14: நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் இருந்து 4 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த மணி(50), அறிவழகன்(39), தமிழ்மணி(27), பாவாடைராயன்(31) என தெரிந்தது.இதை தொடர்ந்து 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, மணல் கடத்த பயன்படுத்திய 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ஆற்று பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு