குற்றாலம் அருவி தடாகத்தில் மிதந்த வாலிபர் சடலம்

தென்காசி, ஆக. 14:  மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் சூரியநாராயணன் (20). பழக்கடை  ஒன்றில் பணியாற்றி வந்த இவர், கடந்த 10ம் தேதி நண்பர்களுடன் குற்றாலத்திற்கு குளிக்க வந்துள்ளார். அருவியில் குளிக்க சென்றவரை, அதன்பிறகு காணவில்லை. இதுகுறித்து அவரது நண்பர்கள், குற்றாலம் போலீசில் புகார் செய்தனர். போலீசார், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.  இந்நிலையில் சூரியநாராயணன், நேற்று முன்தினம் நள்ளிரவு மெயினருவி தடாகத்தில் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அருவியில் குளிக்கும்போது மூச்சுத்திணறி தடாகத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார்அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: