வில்லிவாக்கம் பகுதியில் மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம்

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கம் ரெட்டி தெரு பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தொட்டியின் மூலம் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வந்தது. தற்போது கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.  இதுகுறித்து சென்னை மாநகராட்சி 95வது வார்டுக்கு உட்பட்ட உதவி பொறியாளர் சந்திரசேகரிடம் தொலைபேசி மூலமாக பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று உதவி பொறியாளர் சந்திரசேகரை சந்தித்து எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தாலும் அவர்களை விரட்டி அடிப்பதாக அப்பகுதி மக்கள் மத்தியில் குற்றம்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து தங்கள் பகுதிக்கு குடிநீர் இனியும் வினியோகம் செய்யாமல் இருந்தால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பான செய்தி, நேற்று தினகரன் நாளிதழில் வௌியானது.

இந்நிலையில் உதவி பொறியாளர் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீரை வழங்க ஏற்பாடு செய்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: