×

சூளைமேடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை உடைத்து 16 சவரன் கொள்ளை

சென்னை: சூளைமேடு பத்பநாபன் நகரில் 3 மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்பில் 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தரைத்தளத்தில் தனியார் நிறுவன ஊழியர்களான வாசு, சிவகுமார், குமார் உள்ளிட்ட 4 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் தரைத்தளத்தில் உள்ள 4 குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு ெவளியே ெசன்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்துபோது மர்ம ஆசாமிகள் வாசு வீட்டில் 13 சவரன் நகை மற்றும் 14 ஆயிரம் பணம்  மற்றும் சிவகுமார் வீட்டில் 3 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. குமார் மற்றும் மற்றொருவர் வெளியூர் ெசன்றுள்ளதால் அவர்கள் வந்த பிறகு தான் எவ்வளவு நகை கொள்ளைபோனது என்று தெரியவரும்.
இந்த சம்பவம் குறித்து வாசு மற்றும் சிவகுமார் ஆகியோர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் பத்பநாபன் நகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ெபற்று விசாரிக்கின்றனர்.

* தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (35). அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்துகிறார். நேற்று முன்தினம் புஷ்பா  தண்டையார்பேட்டை போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடைக்கு பொருள் வாங்க வந்த 3 பெண்கள் கல்லா பெட்டியில் இருந்த ₹2.50 லட்சம் பணத்தை திருடி சென்றதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* திருமுல்லைவாயல் சத்திய மூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்குள்ள வகுப்பறையில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 21 லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை பள்ளியை திறந்து பார்த்தபோது 6 லேப்டாப் திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியரை மேரி ஆண்டனி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* தாம்பரம், விமானப்படை குடியிருப்பை சேர்ந்தவர் சஞ்சய் குமார் சிங் (52). விமானப்படை அதிகாரி. நேற்று தனது தாய் கைலாஷ் தேவி (80) என்பவருடன் பைக்கில் வேளச்சேரி மெயின்ரோடு வழியாக சென்றார்.
மேடவாக்கம் தனியார் ஓட்டல் அருகே வரும்போது பின்னால் இருந்த கைலாஷ் தேவி திடீரென கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ் அவர் மீது ஏறியதில் பலத்த காயம் அடைந்து இறந்தார். இதுகுறித்து மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.
*  பெரும்பாக்கம், மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகா (34). இவரது கணவர் வசந்தகுமார். தம்பதிக்கு 2 பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் கார்த்திகா நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆல்பட் ராஜ்குமார் (55). இவர், அதே தெருவில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தை நிர்வகித்து வருகிறார்.
நேற்று காலை ஆல்பட் ராஜ்குமார் தேவாலயத்திற்கு வந்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே
இதுகுறித்து ஆல்பட்ராஜ்குமார், ஐசிஎப் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா? என விசாரிக்கின்றனர்.
* ஐசிஎப் காந்திநகர் பஸ் ஸ்டாப்பில் நேற்று காலை கோயம்பேட்டில் இருந்து எம்.கே.பி நகர் செல்லும் மாநகர பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி திடீரென பஸ் மீது வேகமாக மோதியது.
இதில் பேருந்தில் இருந்த நெற்குன்றத்தை சேர்ந்த ஜெமினா (25) காயம் அடைந்தார். புகாரின்பேரில் திருமங்கலம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சசிக்குமார் (35) என்பவரிடம் விசாரிக்கின்றனர். 

Tags :
× RELATED மணல் தேங்குவதை தடுக்க பழவேற்காடு ஏரி...