மாதவரத்தில் புதிய நீதிமன்றம் இன்று திறப்பு

திருவொற்றியூர்: மாதவரத்தில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று திறக்கப்படுகிறது. மாதவரம் வருவாய் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் மாதவரம், மாதவரம் பால் பண்ணை, புழல் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பதியப்படும் வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் குற்றவாளிகள் ஆஜர்படுத்துவது போன்றவைகளுக்காக திருவொற்றியூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாதவரம் வருவாய்த் துறைக்கு உட்பட்ட பகுதியிலேயே புதிய நீதிமன்றம் அமைக்க நீதித் துறை திட்டமிட்டது.  இதன்படி மாதவரம் பேருந்து நிலையம் அருகே வாடகை கட்டிடத்தில் மாதவரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று மாலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: