மண்டல அலுவலகங்களில் மின்னணு கழிவுகளை அளிக்கலாம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் தினந்தோறும் மக்கும் குப்பை, மக்காக குப்பை வீடு வீடாக சென்று சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் போது பெரும்பாலான மக்கள் மின்னணு கழிவுகளை இவற்றில் கலந்து விடுகின்றனர். இதனால் அவற்றை பிரித்து முறையாக மறுசுழற்சி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள மின்னணு கழிவுகளை மாநகராட்சியிடம் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் 15 மண்டல அலுவலகங்களில் மின்னணு கழிவுகளை அளிக்கலாம். இதற்காக அனைத்து மண்டல அலுவலங்களில் சேகரிப்பு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளனது. பொதுமக்கள் தங்களது வீட்டில் உள்ள பயன்படுத்தபடாத மின்சாதன பொருட்கள், கணினியின் உதிரி பாகங்கள், லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு மின்னணு கழிவுகளை மாநகராட்சியிடம் அளிக்கலாம். அதன்படி வரும் 17ம் தேதி பொதுமக்கள் இந்த கழிவுகளை மாநகராட்சி அலுவலங்களில் அளிக்கலாம்.

Advertising
Advertising

Related Stories: