பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து எதிரொலி அரசு அலுவலகங்களில் சர்வர் பிரச்னை: ஸ்காலர்ஷிப் பெற முடியாமல் மாணவர்கள் அவதி

பெரம்பூர்: சென்னை துறைமுகத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கடந்த வாரம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகம் மற்றும் வட சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களில் எங்குமே சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் சிறுபான்மை வகுப்பை சேர்ந்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டு வரும் ஸ்காலர்ஷிப் பணத்துக்கு   வருமான சான்றிதழ் வழங்க வேண்டும்.

Advertising
Advertising

இந்த சூழ்நிலையில் சர்வர் வேலை செய்யாததால் கடைசி நாளான நேற்று பல ஏழை மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கால அவகாசம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: