இலவச லேப்டாப் வழங்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பூர்: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே லேப்டாப் வழங்க கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இதுவரை தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இந்நிலையில் லேப்டாப்பை உடனடியாக வழங்க  வலியுறுத்தி  100க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்கு லேப்டாப் வழங்கும்படி மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமியிடம் மனு அளித்து சென்றனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

Related Stories: