மீஞ்சூர் அருகே பழங்குடியினருக்கு அரசு நிலம் ஒதுக்கீடு

பொன்னேரி, ஆக.14: மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ஊராட்சியில் 56 பழங்குடியினருக்கு அரசு நிலம்  ஒதுக்கீடு செய்யப்பட்டு, வருவாய்த்துறை மூலம் சான்று வழங்கப்பட்டது. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இலவம்பேடு ஊராட்சி ஏரிக்கரை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 56 பழங்குடியின  குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் 56 குடும்பத்தினரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு  அரசு நிலம் வழங்க ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்   உத்தரவின் பேரில் அனுப்பம்பட்டு ஊராட்சியில் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நில அளவை செய்து நேற்று 56 பழங்குடியினருக்கு அரசு நிலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பொன்னேரி ஆர்டிஓ நந்தகுமார், தாசில்தார்  வின்சென்ட் வில்சன் மற்றும் வருவாய்த்துறையினர் 56 குடும்பத்தினருக்கு அரசு நிலம் சான்றுகளை  வழங்கினர். அப்போது ஆதித்தமிழர் விடுதலை இயக்க நிர்வாகிகள் இளஞ்செழியன் அருள்தாஸ், தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED திருத்தணி கோட்ட நெடுஞ்சாலையில் சாலை ஓர முட்புதர்களால் விபத்து அபாயம்