காஞ்சிபுரம் மாவட்டத்தில் 633 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

காஞ்சிபுரம், ஆக.14: கலெக்டர் பொன்னையா வெளியிட்ட செய்தி குறிப்பு. சுதந்திர தினமான நாளை காலை 11 மணியளவில், மாவட்டத்திலுள்ள 633 கிராம  ஊராட்சிகளிலும் தனிஅலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) தலைமையில்  கிராம சபை கூட்டம் நடைபெறும்.இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.மேலும் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் 14வது மத்திய நிதி மான்யக் குழுவினால் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மான்ய நிதி, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் உற்பத்தி தடை செய்தல், உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம், ஜல்சக்தி இயக்கம் மற்றும் ஊராட்சி மன்ற  தனிஅலுவலரால் கொண்டு வரப்படும் இதர பொருட்கள் குறித்தும் விவாதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தலித் சேனா அமைப்பு செயற்குழுக் கூட்டம்