×

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே பெட்ேரால், டீசல் விற்பனை நிலையம் திறப்பு விழா

செங்கல்பட்டு, ஆக. 14: செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் புதிய பெட்ரோல், டீசல் விற்பனை நிலைய துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே நேற்று நடந்தது.கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப் பதிவாளர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு புதிய பெட்ரோல் பங்க்கினை  திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். பின்னர் 649 பேருக்கு பயிர்க்கடன், விவசாய கடன், பண்ணை சாரா கடன், வியாபார கடன், கல்விக் கடன் உள்பட ₹5 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 779 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பில் இதுவரை 29 பெட்ரோல் பங்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இன்னும் 13 பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட உள்ளன. அரசின் வருவாய் ஆண்டுக்கு ₹1 லட்சத்து 76 ஆயிரம் கோடி. இதில் 80 சதவீத நிதி அரசு ஊழியர்கள் சம்பளத்துக்கு சரியாகி விடுகிறது. வெறும் 20 சதவீத நிதியை வைத்து நலத்திட்ட பணிகளை அரசு செய்கிறது. எப்போதும் ஆண்களை விட பெண்கள்தான் திறமையானவர்கள். அதனால் தான் குடும்ப பொறுப்புகளை அவர்களிடம் ஒப்படைக்கிறோம். அவர்கள் தான் சிறப்பாக வழி நடத்துவார்கள். அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் தலைவராக இருக்கும்போது, தமிழகத்தில் 17 லட்சம் தொண்டர்கள் கொண்ட கட்சியாக அதிமுகவை உருவாக்கினார். அதற்குப்பின் வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 17 லட்சமாக இருந்த கட்சி தொண்டர்களை ஒன்றரை கோடியாக மாற்றினார். பெண்கள் எப்போதும் திறமையானவர்கள் என்றார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...