பருத்தி கொள்முதலில் அதிகாரிகளின் ஊழலை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஆக. 14: பாபநாசம் மார்க்கெட் கமிட்டியில் பருத்தி கொள்முதலில் அதிகாரிகள் செய்யும் ஊழலை கண்டிப்பதுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் காந்தி பூங்கா அருகே தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாபநாசம் மார்க்கெட் கமிட்டியில் பருத்தி கொள்முதலில் அதிகாரிகள் செய்யும் ஊழலை கண்டிப்பதுடன் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் பகுதியில் அனைத்து பாசன வாய்க்கால்களையும் விவசாயிகள் பொறுப்பில் தூர்வார வேண்டும். டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.


Tags :
× RELATED பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில்...