கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்

பாபநாசம், ஆக. 14: பாபநாசத்தில் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். உதவி செயலாளர் சுகுமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தில்லைவனம், நலவாரிய செயல்பாடு குறித்து பேசினார்.கூட்டத்தில் கட்டுமான பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மணல் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்தி வரும் 1ம் தேதி காலை பாபநாசம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவது. அரசு போக்குவரத்து கழகத்தில் பிரிமீயம் சர்வீஸ் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும். சாதாரண கட்டண பேருந்துகளை இயக்க வேண்டும். நலவாரியத்தில் கூடுதல் நிதியை ஒதுக்கி நிலுவை விண்ணப்பங்களை பைசல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில்...