அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளி, ஆக.14: திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்களை உடனடியாக நியமிக்ககோரி பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வடபகுதி பொறுப்பாளர் காளிதாஸ், ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், மோகன் தலைமை வகித்தனர்.மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் முகில், மாதர் சம்மேளன ஒன்றிய செயலாளர் கண்ணகி, விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் பேசினர். ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில்...