தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்

தஞ்சை, ஆக. 14: தஞ்சையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். ஊதியமாக ரூ.400 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செப்டம்பர் 9ம் தேதி நாகப்பட்டினத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் வேலை உரிமை பாதுகாப்பு மாநாடு நடத்துவது.மத்திய உணவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக ஏற்று செயல்படுத்த தமிழக அரசு பெற்றிருந்த கால அவகாசம் அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் குடும்ப அட்டைபயனற்று போகும். ஏழைகளுக்கு வழங்கப்படும் 35 கிலோ அரிசியும், ஏஏஎய் அட்டையும் ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

Advertising
Advertising

கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்ப தலைவராக உள்ள குடும்பங்கள், பட்டியல் பழங்குடியினர், சாதியினர், நிலமற்ற கிராம தொழிலாளர் குடும்பங்களுக்கு ஏஏஒய் வகைப்பட்ட குடும்ப அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், மாநில பொது செயலாளர் பெரியசாமி, செயலாளர்கள் பாஸ்கர், சாத்தையா, துணை தலைவர்கள் பழனிசாமி, ராசு, பொருளாளர் சந்திரகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: