திப்பிராஜபுரத்தில் வெளிமாநில மதுபாட்டில் விற்றவர் கைது

கும்பகோணம், ஆக. 14: கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் பகுதியில் அனுமதியின்றி வெளிமாநில மதுபானம் விற்பனை செய்து வருவதாக நாச்சியார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திப்பிராஜபுரம் திருமலைராஜன் ஆற்றின் கரையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது திப்பிராஜபுரம் கீழத்தெருவை சேர்ந்த அப்பு (எ) வைரவேல் (33) என்பவர் 12 வெளிமாநில மதுபாட்டில் விற்பனைக்காக வைத்திருந்த தெரியவந்தது. இதையடுத்து பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் வைரவேலை கைது செய்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தில்...