ரூ.2 லட்சம் வாடகை பாக்கி குடந்தை கோயில் வளாகத்தில் 2 கடைகள் அதிரடி அகற்றம்

கும்பகோணம், ஆக. 14: கும்பகோணம் கோயிலுக்கு ரூ.2 லட்சம் வாடகை பாக்கி தராத 2 கடைகள் அகற்றப்பட்டது.கும்பகோணம் பெரிய தெருவில் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் உள்ளது. இங்கு பீம்சிங், அர்ஜுன்சிங் ஆகியோர் பாதாம் பருப்பு விற்பனை கடை வைத்துள்ளனர். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக கோயிலுக்கு வாடகை தரவில்லை. ரூ.2 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதால் இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்து 2 கடைகளையும் அப்புறப்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மயிலாடுதுறை இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் இளையராஜா, தக்கார் சுதா, செயல் அலுவலர் மல்லிகா ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று 2 கடைகளை அகற்றினர்.

Advertising
Advertising

Related Stories: