திருவையாறு ராஜா நகரில் பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

திருவையாறு, ஆக. 14: திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவையாறு வடக்குவீதி ராஜா நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார் (45). இவர் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். சிவக்குமாரின் அக்கா மகன் சிவக்குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து உறவினர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பார்த்தபோது மர்மநபர்கள் கதவின் முன்பு பூட்டியிருந்த கிரில் கேட்டின் பூட்டை உடைக்காமல் நாதங்கியை நெம்பி உள்ளே சென்று பீரோவை திறந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், 5 புவுன் நகைகள், வைர மோதிரம், 60 கிராம் வெள்ளி போன்ற பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதையடுத்து திருவையாறு காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணரை வரவழைத்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பீரோவை திறந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், 5 புவுன் நகைகள், வைர மோதிரம், 60 கிராம் வெள்ளி போன்ற பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

Advertising
Advertising

Related Stories: