×

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு ஆக.23ல் பென்ஷன் அதாலத்

நாகர்கோவில், ஆக.14:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு:அகில இந்திய அளவிலான பென்ஷன் அதாலத் திருவனந்தபுரம் தம்பானூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் கல்யாண மண்டபத்தில் வரும் 23ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற ரயில்வே பணியாளர்கள், அவர்களின் விதவையர், வாரிசுதாரர்கள் தங்களின் கோரிக்கைகள், தேவைகள் சார்பாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இது தொடர்பான விண்ணப்பங்களை நாளை(15ம் தேதி)க்குள் கோட்ட தனி பிரிவு அலுவலர், தெற்கு ரயில்வே, தைக்காடு, திருவனந்தபுரம் என்ற முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும். பென்ஷன் அதாலத்தில் கொள்கை ரீதியான முடிவுகள், பணி ஆணைகள் போன்றவை வழங்கப்படுவது இல்லை. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை