×

எஸ்பி தகவல் தாசில்தார் பேச்சுவார்த்தையில் சமரசம் பணி நிரந்தரம் செய்ய கோரி கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்,ஆக.14: நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் முன் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் பணிபாதுகாப்பு கோரி திருவாரூர்,நாகப்பட்டிணம் இணை ப்பு ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் அதன் சங்க தலைவர் மதியழகன் தலைமையில் நேற்று நடந்தது.பொருளாளர் கணேசன்,நிர்வாககுழு கண்ணன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். .பணிபுரியும் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்,பணி வருகை பதிவேடு சம்பள பதிவேடு பராமரிக்க வேண்டும்,தொழிலாளர் நல நிதி பிடித்தம் செய்ய வேண்டும்,சீருடை,டார்ச் லைட்,பொங்கல் போனஸ், தீபாவளி போனஸ் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...