×

பாசன ஆறுகளை தூர்வார கோரி நடைபெற இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் ஒத்தி வைப்பு

திருவாரூர், ஆக. 14: திருவாரூர்மாவட்டம் நன்னிலத்தில் பாசன ஆறுகளை தூர்வாருவது தொடர்பாக நேற்று நடைபெறவிருந்த போராட்டமானது பேச்சுவார்த்தை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.நன்னிலத்தில் இருந்து வரும் நண்டலாறு, நாட்டார் போன்றவற்றினை தூர்வார வேண்டும் கூத்தனூர் ரெகுலேட்டரைசீரமைக்க வேண்டும் ,அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் இந்த கோரிக்கைகள் குறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருமால் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நண்டலாற்றினை 6 கிமீ தூரத்திற்கு தூர்வாருவது, நாட்டாற்றினை3 கிமீ தூரத்திற்கு தூர்வாருவது மற்றும் கூத்தனூர் ரெகுலேட்டரைசிறப்பு நிதியின் கீழ் சீரமைப்பது மற்றும் அந்த பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த போராட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.


Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...