×

மத்திய அரசின் விதை கிராமத்திட்டம் 50% மானியத்தில் அரசு சான்று பெற்ற விதை நெல் பெறலாம்

திருத்துறைப்பூண்டி ஆக.14: மத்திய அரசின் விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மான்யத்தில் அரசு சான்று பெற்ற விதை நெல் பெறலாம் என வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவிஇயக்குநர் சாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மேட்டூர் அணைதிறக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு போக சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நீண்டகால வயதுடைய நெல் ரகமான சி.ஆர்.1009 சப்1இ திருச்சி 3 திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள அரசு வேளாண்மைத்துறை வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. மத்தியகால ரகங்களான கார்50, என்.எல்.ஆர். முதலான நெல் ரகங்களும் இருப்பில் உள்ளன.

திருத்துறைப்பூண்டி, விளக்குடி, ஆலத்தம்பாடி, கட்டிமேடு முதலிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகள் அரசு சான்று பெற்றசம்பா விதை நெல்லினை 50சதவிகித மான்ய விலையில் பெறலாம்.மத்தியஅரசின் விதைக் கிராமத்திட்டத்தின்கீழ் 50சதவிகித மான்ய விலையில் விதைநெல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. உங்கள்பகுதி வேளாண்மைத் துறை அலுவலரின் பரிந்துரையின் பேரில் விதைநெல் மான்ய விலையில் வழங்கப்படும். ஒருவிவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வழங்கப்படும். விதைநெல் அதிகமாக தேவைப்படும் விவசாயிகள்தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் விதைநெல் பெற்றுக்கொள்ளலாம்.ஆதார் அட்டை நகல் அவசியம் கொண்டுவர வேண்டும். தொடர்புக்கு திருத்துறைப்பூண்டி ,தீவாம்மாபுரம், விளக்குடி , ஆலத்தம்பாடி, கச்சனம் , கட்டிமேடு ஆகிய உதவி வேளாண் அலுவலர்களை அணுகி பயனடையலாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...