×

செம்படவன்காடு அரசு பள்ளியில் குடிநீரின்றி மாணவர்கள் அவதி

முத்துப்பேட்டை ,ஆக.14: முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் தலைமையாசிரியர், ஆசிரியர், தற்காலிக ஆசிரியர் ஆகியோர் பணியில் உள்ளனர். மேலும் தனியாக சத்துணவு கூடம், கழிப்பறைகள். குடிநீர்தொட்டி போன்ற போன்ற பல்வேறு வசதிகள் இருப்பது போல் காணப்பட்டாலும் இந்த பள்ளிக்கு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக குடிநீர்தொட்டி உள்ளது. ஆனால் குடிநீர்விநியோகம் இல்லை, கழிப்பறை உள்ளது ஆனால் பாதுகாப்பு இல்லாமல் சேதமாகியுள்ளன. அதேபோல் சுற்று சுவர்இல்லாமல் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதால் இரவில் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் குடிநீர்இல்லாமல் இருப்பதுதான் இந்த பள்ளியின் முக்கிய பிரச்னையாக உள்ளது. குடிநீர்வழங்கும் குடிநீர்தொட்டியும் பயனற்று போனதால் படிப்படியாக சேதமாகி வருகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோர்கள் கிராம மக்கள் இந்த பள்ளிக்கு குடிநீர்வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் இதுநாள்வரை செய்து கொடுக்கவில்லை. மேலும் இந்த பள்ளியில் உள்ள போரிலும் தண்ணீர்உப்பாக இருப்பதால் மற்ற தேவைக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை. அதனால் குடிநீர்வெளியில் காசு கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதில் பள்ளிக்கு குடிநீர்கொண்டு வராத மாணவர்கள் வேறு வழியின்றி இங்குள்ள போர்வெல் உப்பு தண்ணீரை குடிக்கும் பரிதாப நிலை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே மாணவர்கள் நலன்கருதி இந்த பள்ளிக்கு பேரூராட்சி நிர்வாகம் உடன் முதலில் குடிநீர்வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் இல்லையேல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர்கிடைக்க உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும். அதேபோல் கழிப்பறையை சீரமைத்தும் அதேபோல் பள்ளியை பாதுக்காக்கும் வகையில் சுற்றுசுவர்அமைத்தும் தரவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...