புஷ்பவனம் திரவுபதையம்மன் கோயிலில் தீமிதி விழா

வேதாரண்யம், ஆக.14: வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் திரவுபதையம்மன் கோயிலில் தீமிதி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தில் அமைந்துள்ளது திரவுபதையம்மன் கோயில். இந்த கோயிலின் ஆடி தீமிதி திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று அம்மன் பரிவார தேவதையுடன் எழுந்தருளி தீக்குண்டம் எதிரே நிறுத்தப்பட்டது. பின்னர் விரதமிருந்து சாட்டை அடி பெற்ற 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்பு அம்மன் பரிவார தேவதைகளுடன் வீதியுலா காட்சியும் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags :
× RELATED சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை...