ஆய்வின்போது கலெக்டர் தகவல் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் குறுவட்ட விளையாட்டு போட்டி

சீர்காழி, ஆக.14: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையால் 20192020ம் ஆண்டிற்கான குறுவட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சீர்காழியின் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து பிரிவினற்கான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.போட்டியை பள்ளியின் தாளாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் முன்னிலை வகித்தார். போட்டியில் 14 வயதிற்குட்பட்ட வர்களுக்கான போட்டியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன. 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி முதலிடமும், ஆயங்குடிபள்ளம் வெங்கடேசா மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பிடித்தன.19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் வெங்கடேசா மேல்நிலைப்பள்ளி முதலிடமும், மேலையூர் சீனிவாசா பள்ளி இரண்டாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார். உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் இப்போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.


Tags :
× RELATED பஸ் மோதி தொழிலாளி பரிதாப பலி