மாவட்டம் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தகவல் நாகை மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையில் பெண்கள் உள்பட 28 பேர் கைது

நாகை, ஆக.14: நாகையில் நேற்று முன்தினம் நடந்த மதுவிலக்கு சோதனையில் 3 பெண்கள் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க எஸ்பி ராஜசேகரன் உத்தரவிட்டார். இதையடுத்து மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம்(12ம் தேதி) மாவட்டம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் 50 மதுவிலக்கு குற்றங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டது. நாகை அருகே பாப்பாகோவில் மதகடி தெருவை சேர்ந்த அஞ்சம்மாள்(40), சீர்காழி முதலைதிட்டு பகுதியை சேர்ந்த உமா(38), அளக்குடி மணியாற்று தெருவை சேர்ந்த இந்திரா(37) உட்பட 28 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 4085 லிட்டர் பாண்டிசேரி சாராயம் கைப்பற்றப்பட்டது. 3 இரண்டு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED நாகை மாவட்டத்தில் 1.44 லட்சம்...