கொசு உற்பத்தியால் மக்கள் கடும் அவதி திருமலைராயன்பட்டினத்தில் உள் விளையாட்டு அரங்கம்

காரைக்கால், ஆக.14:இந்திய விமான போக்குவரத்து ஆணையம் சார்பில், காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது என புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில், கைப்பந்து பயிற்சிக்கான தளம் அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், கட்டுமானப் பணியை தொடங்கி வைத்து, நிருபர்களிடம் கூறியது:திருநள்ளாறு பகுதி மட்டுமல்லாது, காரைக்கால் பகுதி இளைஞர்களும் பயிற்சி பெறும் வகையில், மத்திய அரசின் நிதி ரூ.10 லட்சம் செலவில், மாவட்ட பொதுப்பணித் துறை மூலமாக, திருநள்ளாற்றில் இந்த கைப்பந்து பயிற்சித்தளம் அமைக்கப்படுகிறது. இது அடுத்த 4 மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.மேலும், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் (ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியா) சமூக பொறுப்புணர்வுத் திட்ட நிதி ரூ.1 கோடியில், காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில் உள் விளையாட்டு அரங்கம் ஒன்று கட்டப்படவுள்ளது. இதற்கான நிதி அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான கட்டுமான பணி தொடங்கும்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.சி. என்கிற அமைப்பு மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கால்பந்து மற்றும் பிற விளையாட்டுகளை தகுந்த முறையில் பயிற்சித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக கவுரவ உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்கவும், இவர்களுக்கு ஊதியம் வழங்கவும் உரிய நிதி ஒதுக்க வேண்டுமென முதல்வரிடமும், நலவழித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவிடமும் வலியுறுத்தியுள்ளேன். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், அனைத்து பள்ளி மாணவர்களும் ஏதேனும் ஒரு விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்களாக உருவெடுப்பார்கள் என்றார்.நிகழ்ச்சியில், தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பஸ் மோதி தொழிலாளி பரிதாப பலி