சீர்காழியில் இடிமின்னலுடன் கனமழை

சீர்காழி, ஆக.14:சீக்ராழி பகுதியில் நேற்று மாலை இடிமின்னலுடன் கனமழை பெய்ததால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக மின்சாரம் தடைபட்டு நகரம் மற்றும் கிராம பகுதிகள் இருளில் மூழ்கின. கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த பொதுமக்களுக்கு திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோட்ட பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இந்த மழை குறித்து செம்மங்குடி விவசாயி தாயுமானவன் கூறுகையில், சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் நேற்று திடீரென்று பெய்த மழையால் வெயின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசினாலும், குறுவை சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடையும் நிலை ஏற்படும்.தொடர்ந்து மழை பெய்தால் நெற்கதிர்கள் உதிர்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றார்.


Tags :
× RELATED பணி பாதுகாப்பு வழங்க கோரி கல்லூரி...