ஓய்வூதியர்களின் 3வது மாவட்ட மாநாடு

திருப்பூர், ஆக.11:திருப்பூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் 3வது மாவட்ட மாநாடு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சந்திரன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் பாலசந்திரமூர்த்தி அறிக்கை வாசித்தார். வரவு, செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் மேகவர்ணன் தாக்கல் செய்தார். மாநில செயலாளர் செல்லத்துரை, மாநில துணைத்தலைவர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாஸ்கரன், மண்டலத்தலைவர் துரைசாமி, கோட்டச்செயலாளர் கருப்புசாமி  உட்பட பலர் பேசினர்.  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். ஏ மற்றும் பி பிரிவினர் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை மாவட்ட துணைத்தலைவர்கள் நடராஜன், மின்னல்கொடி ஆகியோர் படித்தனர். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் நடராஜன் நன்றி கூறினர்.  இந்த மாநாட்டில்,  திருப்பூர், தாராபுரம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளைச்சார்ந்த ஓய்வூதியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: