மாவட்டத்தில் சாரல் மழை

ஈரோடு,  ஆக. 11: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, திருப்பூர்,  நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு  மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையானது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.  மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் லேசான சாரல் மழையாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை மில்லி மீட்டரில்: தாளவாடி 4 ., சத்தி 7, பவானிசாகர் 7.2, பவானி 2.4, கொடுமுடி 3.2, நம்பியூர்,  மொடக்குறிச்சி தலா 2, சென்னிமலை, வரட்டுப்பள்ளம், கோபி தலா 3, கவுந்தப்பாடி  4.2, எலந்தைகுட்டை மேடு 5.2, கொடிவேரி 3.2 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.  மாவட்டத்தின் சராசரி மழையளவு 2.9 மில்லிமீட்டர் ஆகும்.

Advertising
Advertising

Related Stories: