சிட்டி ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம்

ஈரோடு, ஆக. 11: ஈரோடு சிட்டி ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் சங்க பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பிரசன்ன குமார் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், பொருளாளர் அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடகை பாத்திரம், பர்னிச்சர், ஒலி,ஒளி அமைப்பாளர்களுக்கு வாடகை பட்டியல் நிர்ணயம் செய்ய வேண்டும். மின்சார பணிபுரியும் ஒலி,ஒளி அமைப்பாளர்களுக்கு ஹெல்பர் லைசன்ஸ் வழங்க வேண்டும். மத்திய அரசின் பிரதமர் திட்டத்தின் கீழ் லோன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழா முடிவில் முஸ்தபா என்ற சண்முகம் நன்றி கூறினார்.    கூட்டத்தில் கவுரவ தலைவர் மீனாட்சி சுந்தரம், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், சுரேஷ், துணை செயலாளர் சசிகலா பெருமாள், துணை பொருளாளர் அருள்மணி மற்றும் மாவட்டத்தில் உள்ள சங்க உறுப்பினர்களான டெக்கரேட்டர்ஸ், பந்தல், ஒலி,ஒளி அமைப்பாளர்கள், பார்த்திரம், பர்னிச்சர் வாடகை கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: