சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட 477 பேர் மீது வழக்கு

சென்னை, ஆக. 11: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்ட பிரிவுகளை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து, தமுமுக சார்பில் நேற்று முன்தினம் சாஸ்திரி பவனை முற்றுகையிடும்  போராட்டம் ஜவாஹிருல்லா தலைலையில் நடந்தது. அப்போது, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடிய வகையில் அரசியல் அமைப்பு சட்டம் 370 பிரிவு மற்றும் 35 ஏ பிரிவை நீக்கி காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் என்ற பெயரில் பாஜ அரசு நிறைவேற்றி இருப்பது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்,எனவே 370, 35 ஏ ஆகிய பிரிவை ரத்து செய்ததை திரும்பபெற வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்நிலையில் போராட்டம் நடத்தியது தொடர்பாக ஜவாஹிருல்லா உள்பட 477 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ், நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: