×

மாநகராட்சியில் 4 கோட்ட அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் 229 மனுக்கள் குவிந்தன 181 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருச்சி, ஆக.11: திருச்சி மாநகராட்சி 4 கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் 181 மனுதாரர்களுக்கு உடனடி உத்தரவுகள் வழங்கப்பட்டது.திருச்சி மாநகராட்சியில் ரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோஅபிசேகபுரம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களுக்கு குறைதீர் சிறப்பு முகாம் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் ரங்கத்தில் 19, அரியமங்கலத்தில் 33, பொன்மலையில் 87 மற்றும் கோஅபிசேகபுரம் கோட்டத்தில் 90 என மொத்தம் 229 மனுக்கள் மாநகராட்சி அலுவலர்களை கொண்டு பெறப்பட்டது. பொன்மலை கோட்ட அலுவலகத்தில் நடந்த முகாமில் மனுதாரர்களுக்கு உடனடி உத்தரவுகளை ஆணையர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

இம்முகாம்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சர்வே வரைபட நகல், புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள், வீட்டு வரி விதிப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், காலிமனை வரி மற்றும் மனை வரன்முறைபடுத்துதல் தொடர்பாக மொத்தம் 229 மனுக்கள் பெறப்பட்டு ஆய்வு செய்து பின்னர் 181 மனுதாரர்களுக்கு உத்தரவுகளை, உடனடியாக ஆணையர் உத்தரவின் பேரில் கோட்ட உதவி ஆணையர்கள் வழங்கினர். மற்ற மனுக்களின் மீது உரிய ஆவனங்களை ஆய்வு செய்தபின் 15 தினங்களில் உத்தரவு வழங்கப்படும் என தெரிவித்தார்.




Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை