திருவானைக்காவலில் புதிய ரேஷன் கடை திறப்பு

திருச்சி, ஆக.11: திருவானைக்காவல் கீழ உள்வீதியில் ரங்கம் தொகுதி எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலான புதிய ரேஷன் கடையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று திறந்து வைத்தார்.ரங்கம் தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் வளர்மதி தொகுதி நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் திருவானைக்காவல் கீழ உள்வீதியில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் வளர்மதி முன்னிலை வகித்தார். இந்த கடையில் 1,294 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, பொது விநியோக திட்ட துணை பதிவாளர் சித்ரா, ரங்கம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, ரங்கம் தாசில்தார் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: