தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் மகா நவசண்டி ஹோமம்

தொட்டியம், ஆக.11: தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், உலக நன்மைக்காகவும் மஹா நவசண்டி ஹோமம் நடைபெற்றது.இதையொட்டி இக்கோயிலில் விநாயகர் வழிபாடு, தேவி மகாத்மிய பாராயணம், யாகவேள்வி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. யாகவேள்வியில் மூலிகை பொருட்கள், பட்டு, தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் புனிதநீர் கொண்டு மதுர காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மதுரகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: