மதுபோதை தகராறில் ரவுடி எரித்து கொலை 6 பேருக்கு வலைவீச்சு

சோழவந்தான், ஆக.11: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த அய்யம்பட்டியில் மலையடிவாரத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ரவுடி சக்தீஸ்வரன்(29) எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சக்தீஸ்வரன் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் சிறையில் இருந்த போது அய்யம்பட்டியை சேர்ந்த உமாசங்கர்(40) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் விடுதலையான உமாசங்கர் நேற்று முன்தினம் சக்தீஸ்வரன் தனது நண்பர் திருமங்கலத்தை சேர்ந்த சதீஸ்குமார்(29) என்பவரும் உமாசங்கரை பார்க்க அய்யம்பட்டிக்கு வந்துள்ளனர்.அங்கு மது அருந்திய போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் கத்தி,அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் உமாசங்கர் தரப்பினர் தாக்கியதில் சக்தீஸ்வரன் இறந்துள்ளார். சிறிய காயங்களுடன் சதீஸ்குமார் தப்பி விட்டார். கொலை செய்த கும்பல் சக்தீஸ்வரன் உடலை முழுவதும் எரித்து விட்டு சென்றுள்ளனர்.சதீஸ்குமார் கொடுத்த தகவல் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான உமாசங்கர் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். கொலையான சக்தீஸ்வரனுக்கு மனைவி, மகன் உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: