வழக்கு தொடர்பவர்களுக்கு வழக்கறிஞர்கள்தான் அரண் ஐகோர்ட் நீதிபதி பேச்சு

திண்டுக்கல், ஆக. 11: திண்டுக்கல் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குமான சிறப்பு மாவட்ட கோர்ட், பெண்களுக்கான கூடுதல் மகிளா கோர்ட் துவக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் நேற்று ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி மகாதேவன் பேசுகையில், ‘

பெண்களுக்கான எதிரான வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கவும், பெண்களை பாதுகாக்கவுமே மகிளா கோர்ட்டுக்கள் உருவாக்கபட்டுள்ளன. வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு விரைவாக நீதியை வழங்கும் திண்டுக்கல்லில் மகிளா கோர்ட்டு ஏற்கனவே உள்ளது. தற்போது கூடுதலாக மேலும் ஒரு மகிளா கோர்ட் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வழக்கு விசாரணை விரைவில் முடிக்கப்படும்.

கோர்ட்டுகளில் வழக்கு தொடர்பவர்களுக்கு அரணாக இருந்து, அவர்களுக்கான நீதியை பெற்று தருவதில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு வழகக்கு விரைவில் முடித்து வைக்கப்படும் வேண்டும் என்றால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கோர்ட் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும்’ என்றார்.தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதி வேலுமணி, பெண்களின் பாதுகாப்பு- சட்ட விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா, டிஐஜி ஜோஷி நிர்மல் குமார், எஸ்பி சக்திவேல், கூடுதல் எஸ்பி சுகாசினி, டிஆர்ஓ வேலு உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக நேற்று முன்தினம் செம்பட்டி அடுத்த ஆத்தூரில் மாவட்ட உரிமையியல்- குற்றவியல் கோர்ட்டும் திறந்து வைக்கப்பட்டது.

Related Stories: