நெடுஞ்சாலைத்துறையில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் பதவி உயர்வு வேண்டும்

கொடைக்கானல், ஆக. 11: கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை எஸ்சி எஸ்டி பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அரசு அலுவலர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் திலகர் தலைமை வகிக்க, நெடுஞ்சாலை துறை சங்க மாநில செயலாளர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணியினை தனியாருக்கு தாரை வார்ப்பதை அரசு கைவிட வேண்டும். நெடுஞ்சாலை துறையில் உள்ள எஸ்சி, எஸ்டி பொறியாளர்கள், சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாதங்களை பணி ஓய்வுக்குப்பின் ஓய்வூதிய பலன்கள் பெறும் வகையில் அரசு

அரசாணை வெளியிட வேண்டும், கல்வி தகுதி அடிப்படையில் சாலை ஆய்வாளர்களாக பணிபுரிபவர்களுக்கு பதவி இறக்க நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசு பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு செய்வதை தமிழக அரசு அரசாணையாக வெளியிட வேண்டும். எஸ்சி, எஸ்டி பொறியாளர்களையும் முதன்மை இயக்குனராக உயர் பதவிகளில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் மாநில நிர்வாகிகள் ராஜன், வைரவன், பஞ்சவர்ணம், மாவட்ட தலைவர் ஜெனிபர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Related Stories: