தேசிய யோகா போட்டிக்கு தேர்வு

திண்டுக்கல், ஆக. 11: தமிழ்நாடு யோகசன சங்கத்தின் 32வது மாநில போட்டியும், 44வது தேசிய போட்டிக்கு தேர்வும் ஈரோடு மாவட்டம், கோபியில் ஆக.3, 4 தேதிகளில் நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட யோகசன சங்கத்தின் சார்பில் 15 பேர் பங்கேற்றனர். இதில் தமிழரசன் (19), தன்மையா (11) ஆகியோர் வெற்றி பெற்றனர்.     இவர்கள் வரும் நவம்பர் மாதம் ஐதாராபாத்தில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இவர்களை திண்டுக்கல் மாவட்ட தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நித்யா, ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் ஆகியோர் வாழ்த்தினர்.

Advertising
Advertising

Related Stories: