×

தண்டராம்பட்டு, பெரணமல்லூர் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நுண்ணீர் பாசன முறைகள்

தண்டராம்பட்டு, ஆக.11: தண்டராம்பட்டு, பெரணமல்லூர் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மற்றும் விவசாய நிலங்களில் பாசன முறைகள் குறித்து மத்திய தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட வரகூர், சாத்தனூர், கொழுந்தம்பட்டு, சிறுப்பாக்கம் புதூர் ஆகிய கிராமங்களில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மத்திய குழுவை சேர்ந்த ரஷீத்குமார் சென், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, துணை ஆட்சியர்(பயிற்சி) மந்தாகினி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மரக்கன்றுகள் நடும் பணி, வீடுகள் மற்றும் தனியார், அரசு அலுவலக கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் முறை ஆகியன குறித்து ஆய்வு செய்தனர். பின்னர், சொட்டுநீர் பாசன முறையில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து, வரகூர் பெரிய ஏரிக்கரையில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது. அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமேலழகன், கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் நடராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

பெரணமல்லூர்:பெரணமல்லூர் ஒன்றியம் நெடுங்குணம், அரசம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயம் நடைபெறும் விளைநிலங்களை நேற்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் பயிர் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு மத்திய குழுவினர் பதிலளித்தனர். மேலும், குறைந்தளவு தண்ணீரில் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது, வேளாண் உதவி இயக்குனர்(பொறுப்பு) சுந்தரம் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED திருவாசகத்தை சுமந்தபடி சிவனடியார்...