×

செய்யாறு அடுத்த உக்கல் சித்தேரியில் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செய்யாறு, ஆக.11: செய்யாறு தாலுகா, அனக்காவூர் ஒன்றியம் உக்கல், வெள்ளாமலை, கூழமந்தல், மகாஜனம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு, செய்யாற்று படுகை கீழ்நீர்குன்றம் கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், உத்தரமேரூர் தாலுகா மற்றும் மதுராந்தகம் தாலுகாவில் உள்ள ஒரு சில கிராமங்களுக்கும் இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் விநியோகிக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் இரும்பு பைப்லைன், உக்கல் சித்தேரி கரையில் உள்ள கல்வெர்ட்டின் அருகிலேயே சேதமடைந்து கடந்த ஓராண்டிற்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது. அங்கிருந்து வெளியேறும் குடிநீர் கரம்பான வயல்வெளியிலும், சாலை ஓரங்களிலும் வீணாக தேங்கி நிற்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் அந்தந்த கிராமங்களில் குடிநீர் விநியோகிக்கும் டேங்க் ஆபரேட்டர்கள், பம்ப் அவுஸ் அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.எனவே, உக்கல் சித்தேரி அருகே உடைந்துள்ள பைப்லைனை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...