×

பேரூராட்சி, நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் இரவில் சாலை தடுப்பு சுவரில் ேமாதி விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

செங்கம் நகரில் மின்விளக்குகள் எரியாததால்

செங்கம், ஆக.11: செங்கம் நகரில் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் சாலை தடுப்புச் சுவரில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்கிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். செங்கம் புதிய பஸ் நிலையம் முதல் ஆற்றுப்பாலம் வரையில் சாலையின் நடுவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலை தடுப்புச் சுவரில் கருப்பு, வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. அதேபால், வளைவுகளில் எச்சரிக்கை பலகை, ஸ்டிக்கர்கள் போன்றவை அமைக்கப்படவில்லை. மேலும், அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடக்கிறது. இதுவரையில் 30க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்து உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து செங்கம் நகர மக்கள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, செங்கம் நகரில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும், சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்படாத வகையில் எச்சரிக்கை பலகை மற்றும் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(தி.மலை) கூட்டு குடிநீர் திட்ட பைப்லைன் உடைந்து ஓராண்டாக வீணாகும் தண்ணீர்

Tags :
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...