தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்க கட்டிடம் திறப்பு

தூத்துக்குடி, ஆக. 11: தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தை மாநில பொதுச்செயலாளர் அன்பரசு திறந்து வைத்தார். தூத்துக்குடி-  பாளைரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் எம்.ஆர். அப்பன் இல்லம்,  டி.கே.சுந்தர பாண்டியன் அரங்கம் ஆகிய புதிய கட்டிட திறப்பு விழா  நடந்தது. இதையொட்டி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை மாநில பொருளாளர்  தங்கராஜ் ஏற்றினார். அகில இந்திய அரசு ஊழியர் சங்கக் கொடியை அகில இந்திய  துணைத்தலைவர் ஞானத்தம்பி ஏற்றினார். எம்.ஆர்.அப்பன் இல்லத்தை  முன்னாள் பொதுச்செயலாளர் சங்கரன் திறந்து வைத்தார். டி.கே. சுந்தரபாண்டியன்  அரங்கத்தை மாநில தலைவர் (பொறுப்பு) செல்வம் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் அன்பரசு மாவட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்தார். தொடர்ந்து நடந்த வாழ்த்துரை நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கலைஅரசன் தலைமை வகித்தார்.  கட்டடக்குழுதலைவர் ஜெகநாதன், மாவட்டச் செயலாளர் செந்தூர் ராஜன், மாவட்ட துணைச்  செயலாளர் அண்டோ, தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர்கள் சங்கத்தின் வியாகுலபுஷ்பம்,  விஜய் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். விழாவில் மாநில துணைத்தலைவர் குமாரவேல், பார்த்திபன்,  மாநில செயலாளர் ராஜகுமார், கலைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 மாவட்ட துணைத்தலைவர்  சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: