சிவத்தையாபுரத்தில் ஆக. 13ல் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா

ஏரல், ஆக. 11:  சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயில் கொடை விழா நாளை மறுதினம் (13ம் தேதி) நடக்கிறது.   சாயர்புரம் அருகேயுள்ள சிவத்தையாபுரம் முத்துமாலை அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கொடை விழா விமரிசையாக நடந்து வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான கொடை விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. இதையொட்டி அன்று இரவு திருவிளக்கு பூஜை, முத்துமாலை அம்மனுக்கு மஹா தீபாராதனை நடந்தது. 8ம் தேதி முதல்  10ம் தேதி வரை தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகளும், அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.     இன்று (11ம் தேதி) இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. நாளை (12ம் தேதி) மாலை 5 மணிக்கு 504 சுமங்கலிகளுக்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு மஹா தீபாராதனை, 9.15 மணிக்கு வில்லிசை நடக்கிறது. கொடை விழாவான வரும் 13ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஆனந்த விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்குகிறது. 10 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஆனந்த விநாயகருக்கு மாலை சாற்றி சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு மன் நாராயண சுவாமிக்கு மாலை சாற்றி சிறப்பு பூஜை, 8.45 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், இரவு 9 மணிக்கு நையாண்டி மேளத்துடன் கரக ஆட்டம், 10 மணிக்கு முத்துமாலை அம்மன் கோயிலுக்கு மாவிளக்கு, ஆயிரங்கண் பானை, விரதம் மற்றும் விரதம் இருந்து வரும் பக்தர்களை அழைத்து வருதல், இரவு 12 மணிக்கு முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. வரும் 14ம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு முத்துமாலை அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா, அதிகாலை 4 மணிக்கு வாணவேடிக்கை,  இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை சிவத்தையாபுரம் இந்து நாடார் உறவின்முறை தர்மகர்த்தா அச்சுதன் நாடார் செய்து வருகிறார்.

Related Stories: