திருச்செந்தூரில் இன்று அம்பேத்கர் அறக்கட்டளை வெள்ளிவிழா கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

தூத்துக்குடி, ஆக. 11: திருச்செந்தூரில் இன்று நடைபெறும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை வெள்ளிவிழாவில் எம்பிக்கள் கனிமொழி, திருமாவளவன் பங்கேற்கின்றனர். டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை வெள்ளிவிழா திருச்செந்தூரில் உதயம் இண்டர்நேசனல் ஓட்டலில் இன்று (11ம் தேதி) மாலை 4மணியளவில் நடைபெறுகிறது. அம்பேத்கர் அறக்கட்டளை தலைவர் தாமோதரன் தலைமை வகிக்கிறார். ஓய்வுபெற்ற வருமான வரி அதிகாரி விஜயராஜன் முன்னிலை வகிக்கிறார்.  விழாவில் முதன்மை விருந்தினர்களாகப் பங்கேற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 10,  12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசுகின்றனர்.

 ஏலகிரி ஊரக சுகாதார மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குநர் பென்னட் பெஞ்சமின், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் தாமோதரன், சமுத்திரம், ஜெயகீதன், ராஜன், மதிவாணன், சுரேஷ்குமார், விஜயராஜன், பிரபாகரன், துரை, செல்வவிநாயகம், சரவணன், முருகன் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: