விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக்கில் ரத்த தான முகாம்

நாசரேத்,   ஆக. 11:  தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில்  மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ரத்த தானம் செய்தனர்.   தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில்  ரத்த தான முகாம் நடந்தது. நாட்டு   நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை திட்டம், ரோட்ட ராக்ட் சார்பில் 10ம் ஆண்டாக நடந்த இம்முகாமை கல்லூரித் தாளாளர் முத்தையா  பிள்ளை  தலைமை வகித்து துவக்கிவைத்தார். நெல்லை அரசு  மருத்துவக்  கல்லூரி முன்னாள் தலைமை மருத்துவர்  ராஜேந்திர ரத்தினம்,  ரோட்டரி கிளப்  மேற்கு மாவட்டத் தலைவர் மாரியப்பன், ரோட்டரி கிளப் மேற்கு  மாவட்டச் செயலாளர்  ரவிசந்தர்  முன்னிலை வகித்தனர். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவர் பரிமளம் தலைமையிலான  மருத்துவக்குழுவினர், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்-அலுவலர்கள் ஆர்வமுடன் வழங்கிய ரத்த தானத்தை சேகரித்தனர்.      ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுரேஷ்தங்கராஜ் தாம்சன் , துணை முதல்வர் விமலா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: