கடையம் அருகே மதகு பள்ளத்தில் விழுந்து காயமடைந்த பெண்ணுக்கு பூங்கோதை எம்எல்ஏ ஆறுதல்

கடையம், ஆக.11:   கடையம் அருகே காவேரிகூத்தன்குளத்தில் மதகு பணி நடந்து வருகிறது. இதற்காக  சாலையை தோண்டி போடப்பட்டது. இதற்காக அப்பகுதியில் எந்தவொரு அறிவிப்பு பலகையும்  வைக்காமல், கயிறு மட்டும் கட்டியுள்ளனர்.  இந்நிலையில் பூவன்குறிச்சியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி ராமலட்சுமி(55) அவ்வழியாக வந்த போது கயிற்றில்  சிக்கி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றுள்ளார். நேற்று பூங்கோதை எம்எல்ஏ, காயமடைந்த ராமலட்சுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.

பொதுப்பணித்துறை அலட்சியத்தால் காயமடைந்த ராமலட்சுமிக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டார். இதில் முன்னாள்  ஊராட்சி மன்ற  தலைவர் வின்சென்ட், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, ஆர்எஸ்.பாண்டியன், ஊராட்சி செயலாளர் அந்தோணிசாமி, பூவன்குறிச்சி குமார், முத்து ரத்தினம், உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கலெக்டர் கவனிக்காதது ஏன்?பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த ஐயப்பன்   இறந்தார். ராமலட்சுமி படுகாயமடைந்தார். இதுவரை கலெக்டர் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை. இழப்பீடும்  வழங்கப்படவில்லை என்பது  வருத்தம்  அளிக்கிறது என பூங்கோதை எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.

Related Stories: