கார்-பஸ் மோதலில் 6 பேர் காயம்

பேட்டை, ஆக.11:   நெல்லை யிலிருந்து நேற்று மாலை தனியார் பஸ் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வீரவநல்லூருக்கு சென்றது. பஸ்சை பாளை தெற்குபஜாரை சேர்ந்த மாரியப்பன் (41) என்பவர் ஓட்டிச்சென்றார். பஸ் டவுனை அடுத்த கோடீஸ்வரன் நகர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிரே குற்றாலத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு சென்ற சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  கார் அப்பளமாக நொறுங்கியது. காரை ஓட்டி வந்த டிரைவர் ராமநாதபுரம் வல்லான்குளத்தை சேர்ந்த முகம்மது பாஷா மகன் சித்திக்பாஷா மற்றும் இம்ரான், அவரது மனைவி தவ்ஹீத் நிஷா, அஜீதா உள்பட 6 பேர் லேசான காயத்துடன் தப்பினர். பஸ்சில் வந்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து நடந்த பகுதியின் அருகே வேகத்தடை இருந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: