தங்கப்பழம் மெட்ரிக் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு

சிவகிரி, ஆக. 11: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் நடுதலால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  மழை நீரின் முக்கியத்துவம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை மரம் நடுதல் போன்ற அரிய தகவல்கள் செய்தியாக கொடுக்கப்பட்டது.  மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு, மழை வளம் பெறுக உறுதி எடுத்துக்கொண்டனர். பள்ளியின் தாளாளர் முருகேசன், முதல்வர் டெய்ஸிராணி, தலைமையாசிரியைகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்று இயற்கை வளம் காத்தல் நமது கடமை என உறுதி எடுத்துக்கொண்டனர்.  மழை நீர் சேகரிப்பு குறித்து மாணவர்கள் நாடகமாக நடித்து காட்டினர்.

Related Stories: