வாழப்பாடி அருகே அமமுக நிர்வாகி கைது

வாழப்பாடி, ஆக.11: வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி நடு வீதியை சேர்ந்தவர் தருமன். இவரது மனைவி தெய்வானை (52). இவர்களுக்கும் நரசிங்கபுரம் சர்கார் உடையாப்பட்டி காட்டுராஜா (எ) பழனிசாமி (54) என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. பழனிசாமி அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளராகவும், நரசிங்கபுரம் நகர்மன்ற முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று, குறிச்சி ஊராட்சி வழியாக, பழனிசாமி, அவரது மகன் பிரவீன், உறவினர் ராஜலிங்கம் ஆகியோர் காரில் சென்றுள்ளனர். அப்போது

செய்வானை அந்த வழியாக நடந்து சென்றார். இதை பார்த்த பழனிசாமி, காரை நிறுத்தி தெய்வானையை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தெய்வானை கொடுத்த புகாரின் ேபரில், வாழப்பாடி ேபாலீசார் பழனிசாமியை கைது செய்து, சேலம்
Advertising
Advertising

மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: